திருகோணமலை முஸ்லிம் ஹோட்டலுக்குள் புகுந்து சிங்களவர்கள் தாக்குதல் 5 பேர் காயம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

திருகோணமலை முஸ்லிம் ஹோட்டலுக்குள் புகுந்து சிங்களவர்கள் தாக்குதல் 5 பேர் காயம்


திருகோணமலை பஸ்தரிப்பு நிலையம் முன்பாகவுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சிட்டி ஹோட்டலுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் சுமார் 20 சிங்களவர்கள் புகுந்து ஹோட்டலுக்குள் இருந்த முஸ்லிம்களை தாக்கியதாகவும் , இச்சம்பவத்தில் 5 பேர் வரை காயங்களுக்குள்ளானதாகவும்.  நிவ் மூதூர் இணையத்தோடு தொலை பேசி வாயிலாக இணைந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினருமான ஜெயினுதீன் முஹம்மது லாகிர் தெிரிவித்திருந்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,

இச்சம்பவத்தை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த திருகோணமலை பஸ்தரிப்பு நிலையத்தில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் , உடனடியாக இச்சமபவத்தை தடுக்கும் வகையில் அங்கு வந்திருந்த சிங்களவர்களில் மூவரை கைது செய்ததாகவும், ஏனைய சிங்களவர்கள் தப்பித்து ஓடிவிடதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தான் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்திடம் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் யாரும் இச்சம்பவம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு முஸ்லிம்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளி இடங்களுக்கு பிரயாணம் செய்து கொள்வதை முடியுமான வரை தவிர்த்து கொள்வதோடு , வியாபார ஸ்தலங்களை நேரகாலத்தோடு மூடிவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறும் இரவு வேளைகளில் தனியாக நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post Top Ad