கிழக்கு மாகாண சபையின் 12 கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமிலுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார். ! உதுமாலெப்பை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

கிழக்கு மாகாண சபையின் 12 கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமிலுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார். ! உதுமாலெப்பை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உறுப்பினர் ஜெமிலின் சவாலுக்கு அமைச்சர் உதுமாலெப்பை பதில்
கிழக்கு மாகாண சபையின் 12 கட்சித் தலைவர்களின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமிலுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திää நீர்ப்பாசன அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமிலினால் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்தாவதுää மாகாண சபையின் உறுப்பினர்கள் அவசர பிரேரணை கொண்டு வருவதற்கு மாகாண சபை ஒழுக்க கோவையில் இடமும் விதி முறைகளும் இருக்கிறது. அவ்விதி முறைகளுக்கு மாறாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்  செயற்பட்டது அவரின் அறியாமையை வெளிக்காட்டுகின்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அளுத்கமääபேருவல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்செயல்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட அவசர பிரேரணையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரேரணையாக சபை கூடிய தினத்தில் சமர்;ப்பித்த போதுää சபையின் தவிசாளர் இது கிழக்கு மாகாண சபையின் ஒழுக்கக் கோவைக்கு முரணானது என்பதால் இப் பிரேணையை சமர்ப்பிக்க முடியாது என்றார்.
ஏனெனில்ää 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்திற்கு இணங்க செயல் நிரலில் உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகள் தவிர்ந்த வேறு எவ்வித புற நடவடிக்கைகளும் சபை அனுமதியின்றி அமர்வில் முன்வைக்கப்படலாகாது. எப்படியிருப்பினும் பொது முன்னுரிமை கொண்டதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அவசர பிரேரணைகள் அல்லது அன்றைய தின அமர்வில் செயற்படுத்தக் கூடிய பொருத்தமான பிரேரணைகளை முன்வைப்பதற்கு எண்ணியுள்ள உறுப்பினருக்கு சபை அமர்வு நடைபெறும் தினத்தில் சபை ஆரம்பமாவதற்கு முன்னர் அது தொடர்பாக தவிசாளருக்கும் மற்றும் உரிய அமைச்சருக்கும் எழுத்து மூலம் முன்வைத்து அதனை சபையில் முன்வைக்கப்படுவதற்கு தலைவரின் அனுமதி பெறப்பட்டால் அந்த பிரேரணையை முன்வைக்கலாம். அவ்வாறான பிரேரணை பொது முக்கியத்துவம் கூடியதும் அவசரமானது என்பதில் தலைவரின் தீர்மானமே இறுதியான ஒன்றாக அமைவதோடு அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதான ஒன்றாதலுமாகாது என தவிசாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லியினால் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய நிகழ்ச்சி நிரலில் அனுமதி பெற்றிருக்கும் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விதத்திலும் சமாதானத்தை குழப்புகின்ற விதத்திலும் முன்னெடுப்புகளை எடுக்கும் எந்த குழுவென்றாலும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரனையில் ஆளும் கட்சிää எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய நேரம் வழங்கப்படும் எனவும் இப்பிரேரணையை மையமாகவைத்து அளுத்கம தாக்குதல் தொடர்பாக பேசுவதற்கு 4 ½ மணித்தியாலங்கள் வழங்கப்படும் என தவிசாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறான விதிமுறைகள்ää நடைமுறைகள் தெரியாமல் மாகாணசபை உறுப்பினர்  ஜெமீல் அளுத்கமää பேருவல பிரச்சினைகளை முன்வைத்து எரிகின்ற வீட்டில் பீடி பற்ற முனைவது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
90 நாட்களுக்குள் நடைபெறும் மூன்று மாகாண சபைக் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காவிட்டால் தனது உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பதைக் கூட அறியாதவர்  சமூகத்திற்காக செயற்படும் என்னை சமூக அக்கறையற்றவராக காண்பிக்க முயல்வது வெறும் கேலிக் கூத்தாகவே காண்கிறேன்.
தான் சார்ந்த சமூகத்துக்கோ அல்லது பிரதேசத்துக்கோ எதுவுமே செய்ய முடியாதவர்கள் காழ்ப்புனர்ச்சி காரணமாக மற்றவர்கள் மீது இல்லாததும் பொல்லாததுமான குற்றங்களைச் சுமத்தி பெயர் எடுத்துää தனது முதலமைச்சர் கனவை நனவாக்கப்பார்க்கிறார்கள். அறிக்கைகள் விடுவதன் மூலம் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி வருகின்றவர்கள் வரிசையில் வரிசேரும் ஒருவராக இவரும் உள்ளார்.
மாகாண சபை அமைச்சரவையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடாது என்று பகிரத பிரயத்தனம் செய்து தோற்றுப் போனவர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தின் துரோகி என்று காட்ட முனைவதுடன்ää என்னை  அமைச்சுப் பதவியிலிருந்து  நீக்குவதற்கும் கனவு காண்கின்றனர்.
மேலும்ää 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடந்தேறிய இந்த சம்பவத்தை சோற்றுக்குள் முழுப் பூசனிக்காயை மறைப்பது போல் மறைத்து விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்ததாக என் மீது அபாண்டம் சுமத்தும் இவரது துரோகித் தனம் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த வரலாற்று துரோகங்கள் பற்றி நாடே இன்று பேசிக் கொண்டிருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் சமூகத்துக்காகவும் மாகாணத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் என்னை துரோகி என காண்பிக்க முயல்வது அவரின் இயலாமையையும் சுய நல அரசியல் போக்கினையும் வெளிக்காட்டி நிற்கின்றது.
தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியிருக்கின்ற பல்வேறு சவால்களுக்கும்ää அச்சத்திற்கும் மத்தியில் உறுப்பினர் ஜெமீலோடு சவால் விடுவதற்கும் விவாதம் நடாத்துவதற்கும் அதைப் பட்டிமன்றமாக்குவதற்கும் இது ஒரு உகந்த தருணமல்ல. இருந்தாலும்ää சாதாரண சூழ்நிலை வருகின்ற சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 12 கட்சித் தலைவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இவரது சவாலை ஏற்று விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன் என்பதை மிக அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post Top Ad