மூதூர் CSF கிண்ணம் ஈராக் அணியின் வசமானது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

மூதூர் CSF கிண்ணம் ஈராக் அணியின் வசமானது (படங்கள் இணைப்பு)மூதூர் சிவில் பாதுகாப்பு படையினரால் நடாத்தப்பட்டு வந்த 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஈராக் மற்றும் சனிமௌன்ட் விளையாட்டு கழகங்களுக்கிடையில் மூதூர் நெய்தல் நகர் யுனைட்டட் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஈராக் சனிமௌன்ட் அணித் தலைவர் ஈராக் அணியை துடுப்பெடுத்தாடுவற்கு இணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஈராக் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 120 ஒட்டங்களை குவித்தது. ஈராக் அணி சார்பில் சாஜித் 36 ஓட்டங்களையும் , நியாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு 121 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சனிமௌன்ட் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஈராக் அணியிடம் தோல்வியடைந்தது. சனிமௌன்ட் அணி சார்பில் இஜாஸ் அரைச்சதத்தினை பெற்று ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் ஈராக் அணி 2014 CSF கிண்ணத் தொடருக்கான சம்பியன் ஆனது.
No comments:

Post Top Ad