எகிப்து அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் இலங்கை இராணுவத்திற்கு உதவி . - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

எகிப்து அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் இலங்கை இராணுவத்திற்கு உதவி .

(ஹபீபுல்லாஹ் பைஸ்)

இலங்கையில் இப்போது நாம் தீவிரவாதம் கலையப்பட்டு சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்ந்து வருகிறோம் . இதை பெற்று தந்த எமது நாட்டு இராணுவத்திற்கு நாம் பலவிதத்திலும் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம் . அந்த அடிப்படையில் தான் இந்த உதவியும் எகிப்து வாழ் அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது .


எகிப்தில் உள்ள இலங்கை தூதரகத்தால் இலங்கையில் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்த இராணு வீரர்களுக்கு சகல வசதியுடன் கூடிய நடமாடும் கதிரைகள்  வழங்கி வைக்க உதவிகள் கோரப்பட்டன . அந்த அடிப்படையில் எகிப்தில் வாழும் பல இலங்கை வாழ் மக்களும் தங்களது உதவிகளை வழங்கி வைத்தனர்  .அந்த வகையில் தான்  இலங்கை அல் அஸ் ஹர் மாணவர்களாளும் இந்த    உதவி தொகைப்பணம் எகிப்து இலங்கை தூதுவரிடம் கையளிக்கப்பட்டது .

இலங்கையின் ஒவ்வரு குடிமகனும் நம் நாட்டு இரானுவத்திற்கு நன்றிக்கடன் செலுத்த கடமை பட்டுள்ளோம். அந்த வகையில் தான் இந்த உதவியும் வழங்கப்பட்டது.

இந்த உதவி தொகைப்பணத்தை எகிப்துக்கான இலங்கை தூதுவரிடத்தில் முஹம்மது ரியால் , முபீத் லாபீர் இஹபீபுல்லா பைஸ் , முஹம்மது ரிக்சி போன்றவர்கள் மூலம் கையளிக்கப்பட்டது . இந்த  செயல் இலங்கை தூதரகத்தால் நன்றியுடன் நினைவு கூறப்பட்டது .
No comments:

Post Top Ad