வெள்ளை வானில் விஜித தேரரை கடத்தி கொலை செய்ய முயற்சி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

வெள்ளை வானில் விஜித தேரரை கடத்தி கொலை செய்ய முயற்சி

வெள்ளை வான் ஒன்றில் சிலர் தம்மைக் கொலை செய்யத் துரத்தி வருவதாக ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
நான் செல்லும் இடங்களை வெள்ளை வான் ஒன்று பின் தொடர்கின்றது.
இது தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
தம்மை பின்தொடர்ந்த வாகனத்தின் இலக்கம் போலியானது என்பதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்துள்ளனர் என சிங்கள ஊடகமொன்றுக்கு விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை வட்டரக்கே விஜித தேரர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad