மூதூர் சம்பூர் மகாவித்தியாலத்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 13, 2014

மூதூர் சம்பூர் மகாவித்தியாலத்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

(tm)

கடற்படையினரின் பயிற்சி முகாமாக இயங்கி வரும் சம்பூர் மகா வித்தியாலயத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண செயலாளர் எஜ்.ஜெயராஜாவினால், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

திருகோணமலை மாவட்டத்தின் தொன்மையினைப் பறைசாற்றி நிற்கும் பழம்பெரும் கிராமம் சம்பூர் கிராமமாகும். அக்கிராமத்தின் தொன்மையினை ஒத்ததாகவே திÆசம்பூர் மகா வித்தியாலயம் விளங்குகின்றது. 

அப்பிரதேச மக்களின் கலாசாரப் பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் திÆசம்பூர் மகா வித்தியாலயம், கல்வித் துறையிலும் சாதனைகள் பல படைத்து இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கல்விமான்களையும் பழைய மாணவர்களையும் கொண்ட விருட்சமாக விளங்குகின்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியது. எனவே அன்றிலிருந்து இன்று வரை அப்பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். 

கல்வித்துறையில் பல சாதனைகள் படைத்த இவ்வித்தியாலயம், 2006ஆம் ஆண்டு முதல் கடற்படையினரின் பயிற்சி முகாமாகவே இயங்கி வருகின்றது. ஆனால் சம்பூர் மகா வித்தியாலயமோ, தற்பொழுது சேனையூர் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியில் இயங்கி வருகின்றது. 

அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஐந்நூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு, தாங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியும் வருகின்றனர். கற்றவர்கள் செறிந்து வாழும் எமது நாட்டில் கற்கத்துடிக்கும் மாணவர்களின் ஆதங்கம் புரியவில்லையா? ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள்?.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைத் துறைமுகமும் பாரிய கடற்படைத் தளமும் அமைந்து காணப்படும் உயர் பாதுகாப்பு வலயத்திலேயே பாடசாலையொன்று இயங்க முடியுமாகவிருந்தால் சம்பூரில் ஏன் பாடசாலை இயங்க முடியாது? 

எனவே, கல்விமான்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திÆசம்பூர் மகா வித்தியாலயத்தை அதே இடத்தில் இயங்கச்செய்ய முன்வர வேண்டும்' என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad