உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் குட்டி விமானம் (படங்கள் + இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 13, 2014

உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் குட்டி விமானம் (படங்கள் + இணைப்பு)பிரான்ஸ் நாட்டில் தவுலோசில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி விமானத்தை தயாரித்துள்ளது.
‘இ–பேன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் மொத்தமே 19 அடி நீளமே உள்ளது.

அதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். பெட்ரோல் டேங்கிற்கு பதில் இதில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பேட்டரியில் சார்ஜ் செய்து மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அதன் உதவியால் இந்த விமானம் பறக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஆன இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் தென் மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது.
அப்போது இந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் பறந்து சாதனை படைத்தது. கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்தில் 10 நிமிட நேரம் மட்டுமே பறந்தது.
தற்போது நடந்த சோதனை ஓட்டம் மூலம் பெரிய அளவில் ஆன விமானத்தை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.No comments:

Post Top Ad