ஊவா மாகாண முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குழப்ப புதிய சதி ? நல்லாட்சிக்கான அமைப்பென்ற மொசாட் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

ஊவா மாகாண முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குழப்ப புதிய சதி ? நல்லாட்சிக்கான அமைப்பென்ற மொசாட்இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் பிரிவினை தலையிடி போதாமைக்கு இப்போது குறுக்கு வழியில் தலைமைப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயத்தைப் பாவித்துப் பழந்தின்று கொட்டை போட்ட ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஜிஜியும் அப்துர் ரஹ்மானின் பழைய ஜிஜியும் தமது எல்லை தாண்டி ஊவா மாகாண மக்கள் மத்தியில் புதுக் குழப்பத்தை உருவாக்க முனைந்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெல்லவில்லையென்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தன்மையால் இலவசமாக கிடைத்த மாகாண சபை உறுப்பினர் பதவியை முறையாகப் பயன்படுத்தி இது வரை தமிழ் அரசியல் சக்திகளை பொது பல சேனா போன்ற அடாவடி அமைப்புகளுக்கு எதிராக பேச வைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் குறித்த ஜிஜி அமைப்பு மற்ற அரசியல் வாதிகளினால் சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களுக்குள் மூக்கை நுழைத்து கெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில்இ ஊவா மாகாணத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றக்கூடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தம்மைப் பற்றி அறியாத மக்களிடம் சென்று புதிய குழப்பங்களை உருவாக்கி இக்கட்சி சார்பான அறிவாளிகள் போலி மாயையை ஏற்படுத்தி வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதே குழுவைச் சேர்ந்தவர்களும் இணைந்தே இலங்கையில் சூறா சபையெனும் பெயரில் அப்பொழுது ஜம்மியத்துல் உலமாவுக்கு எதிராக இருந்த மக்கள் உணர்வைப் பயன்படுத்தி சவுதி அரேபியா சூறா சபை போன்ற முடிவுகளையெடுக்கக்கூடிய அதிகார சபையெனும் தோற்றப்பாட்டில் ஒரு சபையை உருவாக்கி இறுதியில் அது அவர்கள் சாாந்த ஜமாத்தின் நலன் காக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக லண்டன் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப முயன்று இன்று துகிலுரிக்கப்பட்டு வெட்கித் தலை குனிந்து நிற்கிறார்கள்.

இந்த புதிய ழூழூபுபு கூட்டணியானது அப்துர் ரஹ்மானின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மீது ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் வைத்திருந்த அபிமானத்தை முற்றாக அழித்து விடப்போகிறது என்பது மாத்திரமன்றி குறித்த நபர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்த காலத்தில் உருவாக்கிய அமைப்பினாலும் அதன் தந்திரமான நடவடிக்கைகளினாலும் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் கூட இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கிச் சிதறுண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பது நடைமுறை உதாரணமாக சுட்டிக்காட்டத்தக்கது.

குறுக்கு வழியில் அதாவது தலைமைகளுக்கெல்லாம் தலைமை எனும் சித்தார்ந்த அடிப்படையில் அடிமட்ட மக்களோடு களத்தில் நிற்க மாட்டாது தலைவர்களை வழி நடத்தும் தலைவர்கள் என இலகுவாக தலைமைப் பதவியை அடையும் குறுகிய நோக்கம் கொண்ட தந்திரோபாயத்தினை ஐக்கிய இராச்சியத்தில் விதைக்க முனைந்து தற்போது தோல்வி கண்ட நிலையில் இதே சிக்கலை ஊவா முஸ்லிம்கள் மத்தியிலும் விதைப்பதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவது என்ன எனும் கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் ஊவா மாகாணத்தில் மக்களுக்காகவோ தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்காகவோ களத்தில் நிற்க மறுத்துள்ள குறித்த சபையினர் பதுளை மாவட்டத்தில் ஓரளவேனும் சமூக சேவை செய்து வரும் ஒரு அமைப்பின் தலைவரையும் துணைக்கு சேர்த்துள்ளமை பதுளை முஸ்லிம் சமூகம் மத்தியிலும் பாரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக செயற்பாட்டு அடிப்படையில் ஏற்கனவே பிளவுண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்புதிய அமைப்பினதும் அதன் பின்னணி செயற்பாட்டினதும் தாக்கங்களையும் இவ்வமைப்பின் குறுக்கு வழியிலான தலைமைப் போட்டிக்குப் பலியாகி ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் சிதறுண்டு போயிருப்பதையும் கருத்திற்கொண்டு பதுளை பாடசாலை விவகாரங்களுக்காக போராடும் குறித்த சமூக சேவகர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே மக்கள் அபிப்பிராயமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தகவல் அனுப்பியிருக்கின்றார்கள்.

கடந்த கிழக்குமாகாணசபைத் தேர்தலில் விமல்வீரவன்சவோடு கூட்டுச் சதிசெய்து,ஐதேகட்சிக்கு வரவேண்டிய முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து வெற்றிகண்ட பதவிமோகம் கொண்ட கூட்டு அமைப்பு

இலங்கையில் முஸ்லீம்களின் பாதுகாவலர்கள் போல் வேசம் போட்டுஇஇதங்களால் ஒரு பிரதேசசபை உறுப்பினரைக் கூட பெற முடியாது என்பதை அறிந்து!!!!எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டனி....

இலங்கை முஸ்லீம்களின் எதுவிதப் பிரச்சனைகளிலும் சம்மந்தப்படாமல் அறிக்கை விடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு அரசாங்கத்தின் ளுடுஆஊ கட்சியின் ஆசனங்களைக் குறைக்க பிரதேச மட்டங்களில் இயங்கும் துரோகக் கூட்டம்..

தமிழ்கூட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு புலிசார்பு அமைப்புகள் பண உதவியோடு இன ஒற்றுமை மற்றும்ஐக்கியம் என எம்மையே காட்டிக்கொடுக்கும் அமைப்பு.....

அகில இலங்கை உலமாசபை பல்வேறு விமர்சனங்களுக்கு உரியதானாலும்!!
ஹலால் பிரச்சனையை பூதாகரமாக மாற்றிஇ சில அரசியல்வாதிகள் துணையுடன் சூறாசபை என்பதை உருவாக்கி சமூகத்தைக்காட்டிக் கொடுத்த நயவஞ்சகக் கூட்டம்..

ஆகவே

எமக்கு இன்று பல்வேறு சவால்கள் மற்றும் ஒற்றுமையின் அவசியம் தேவயான நிலையில்...
இவர்கள் விடயத்தில் அல்லது இவர்களது வீரப் பேச்சுகளுக்கு இடமளிக்காமல் நிதானமாகச் செயற்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்.???!

Mohamed Basheer
secretary
Trincomalee Muslim Secretariat

No comments:

Post Top Ad