அமைச்சராக இருந்தும் முஸ்லிம்களை மீள குடியேற்ற முடியவில்லை ! ரிஷாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 05, 2014

அமைச்சராக இருந்தும் முஸ்லிம்களை மீள குடியேற்ற முடியவில்லை ! ரிஷாத்


மன்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3 இடங்களில் பெரும்பான்மையினம சார்ந்த பெயர்ப்பலகைகளை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர்.  என அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் சமுகஜோதி ரபீக்கின் மகன் டாக்டர் ஏ.ஆர். அசீம் எழுதிய “ எனக்கும் உனக்குமான உலகம்”  நோய் விழிப்புணர்வு நூலான வரும்முன் காப்போம்” எனும் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டில் 10 வீதமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் கடந்த 20 வருட காலமாக வடக்கில் 1 இலட்சம் முஸ்லிம்கள்  சொந்த மண்னை விட்டு வேறிடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து  வருகின்றனர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் அரசின் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி முதலில் 95 வீதமான தமிழ் மக்களையே வடக்கில் குடியேற்றினேன். இம் மக்களை குடியமர்த்தியபிறகு முஸ்லீம்களை மீளக்குடியமர்த்த ஆயத்தமாகயிருந்தும் எனக்கு வேறு  ஒர் அமைச்சு தரப்பட்டதனால் முஸ்லிம்களை மீளக் குடியேற்ற முடியவில்லை. அது எனது துரதிர்ஷ்டமே.
தற்காலகட்டத்தில் சிங்கள ஊடகங்களில் வடக்கில் பாகிஸ்தான்காரர்களை குடியேற்றுவதாகும் பெரும்பான்மையினர் மத்தியில் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர். ஆனால் இங்கு குறிப்பாக தினகரன், தினக்குரல், நவமணி போன்ற ஊடகங்களினது ஆசிரியர்கள் இங்கு வருகை தந்துள்ளீர்கள்.
முஸ்லிம்களது உண்மைப் பிரச்சினைகளை வெளிக்கெணர்வதற்கு முஸ்லிகளுக்கென்றதொரு ஊடகமோ பத்திரிகையே இந்த  நாட்டில் இல்லை. ஆகவேதான், பெரும்பான்மையினர் பொய்யாக பரப்பும் செய்திகளுக்கு பதிலாக  முஸ்லிம்களின் உண்மை நிலவரத்தை எழுதுங்கள். 2 வாரத்திற்கு முன்பு முஸ்லிம் கவுன்சில் தலைவர்  என்.எம். அமீன்  தலைமையில சகல முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களும் கையெழுத்து இட்டு  வடக்கு முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பட்டதாகவும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இங்கு கூறினார்.(04-05-2014)

No comments:

Post Top Ad