கொக்கட்டிச்சோலையில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்- - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

கொக்கட்டிச்சோலையில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்-(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் 26-05-2014 திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதாளர அபிவிருத்தி பிரதியமைச்சரும்ääமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்ääஉற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத்ääமீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்ääஜனாதிபதியின் விஷேட ஆலோசகரும்ääகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ääமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ääகிழக்கு மாகாண அமைச்சர்கள்ääமாகாண சபை உறுப்பினர்கள்ääஉள்ளுராட்சி மன்றத்தின் பிரதிநிதிகள்ääதிணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் முதற்தடவையாக கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் இதனை ஏற்படுத்தித்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரச சேவையாளர்கள்ääபொது மக்கள் நன்றி தெரிவிக்கினறனர்.

No comments:

Post Top Ad