தலமைத்துவமின்றி தலைகுனிந்து நிற்கும் நம் கிண்ணியா மண் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 26, 2014

தலமைத்துவமின்றி தலைகுனிந்து நிற்கும் நம் கிண்ணியா மண்(பஹ்மி)

முழு நாட்டுக்கும் அரசியல் ஞானம் கற்பித்த மாவீரர் மர்ஹூம் மஜீது வாழ்ந்த எம்மண்ணும் மக்களும் இன்று

விளம்பர மற்றும் விலைபோன அரசியல் வாதகளின் தலமைத்துவம் மற்றும் பிற்போக்குச் சிந்தனையுள்ளோரின்  சுயநல வழிகாட்டல்களால்???


அரசியலில் அநாதையாகஇஅபிவிருத்தியில் ஒதுக்கப்பட்டு இ விபச்சார அரசியலின் தங்குமிடமாக மாறி சுயமரியாதை மற்றும் எதிர்கால முன்னேற்றம் இன்றி ஏமாற்றம் கண்டு நடுத் தெருவில் நிற்கின்றோம்.???

எமது மண்ணில் புதிய மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டதுமான ஒரு தலமைத்துவத்தின் தேவை இன்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால்!!!!

தேர்தல் வந்துவிட்டால் கட்சிக் கொடியை கழுத்தில் நஞ்சுக் குப்பியாகவும்இகுடும்ப அரசியலை பர்ழு ஐனாகவும் கேவலம் நாம் கையில் எடுத்து விடுகிறோம்.

அண்மைக்காலமாக சில புதியதும்இகாமடியானதுமான சில்லறை அரசியல்வாதிகளும் இந்த மக்களை ஏமாற்றி முதலீடு இன்றி வருமானம் தரும் தொழிலாக நமது சொந்தத் தொழிலையே விட்டு எமது ஊருக்குள் முழைத்துள்ளார்கள்.

எமது சிந்தனைக்கு சரியான வழிகாட்டலை நாமே செய்ய வேண்டும். அதற்காக பதிய தலமைத்துவத்தை அடையாளம் காணவேண்டும்.
எம்மை ஆளும் மற்றும் வழிநடத்தும் அந்த சக்தி நமக்குள்ளே மறைந்து கிடக்கின்றது.

ஒருமுறையல்ல பலமுறை தேடுவோம்.நம் வீட்டுலும்இபக்கத்து வீட்டிலும்இ ஏன் பக்கத்து தெருவிலும் தேடுவோம்.

நிச்சயம் நமது புதிய தலமைத்துவம் வெகுதூரமில்லை. நம்பிக்கையோடு நமத புதியபாதையில் புதிய இளைய நம்பிக்கை நட்சத்திரத்தை உருவாக்குவோம்.

ஆகவே மாற்றத்தை விரும்பும் சகலரும் எம்மோடு இணைந்து இந்த புனிதப் போராட்டத்துக்கு ஆக்கபூர்வ ஆதரவைத் தாருங்கள்.

.....சூரியனை இனி கிண்ணியாவில் உதிக்கச் செய்வோம்......

இந்தப் பதியை  நீங்கள் உங்கள் சகநண்பர்களுக்கும் அனுப்பிவையுங்கள்

நமது கிண்ணியா
நாம் கிண்ணியர்
நமது அரசியல்
நமது பாதை
நமது தலமைத்துவம்
நாளைய தமைத்துவம்.

No comments:

Post Top Ad