பங்களாதேஷில் இலங்கை முஸ்லிம் மாணவன் கூரையிலிருந்து விழுந்து வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

பங்களாதேஷில் இலங்கை முஸ்லிம் மாணவன் கூரையிலிருந்து விழுந்து வபாத்

பங்களாதேஷில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷ் சிட்டகொங், குல்ஷி பகுதியில் கூரை மேலிருந்து கீழே விழுந்து 23 வயதுடைய எசான் இர்பான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த மாணவன், வைத்தியத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த குறித்த இளைஞனை, அவருடைய நண்பர் சிட்டகொங் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து சிட்டகொங் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post Top Ad