ரவூப் ஹக்கீம் பொஸ்வானாவுக்குப் பயணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

ரவூப் ஹக்கீம் பொஸ்வானாவுக்குப் பயணம்

பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று பொஸ்வானாவுக்கு பயணமாகின்றார்.
இந்த மாநாடு பொஸ்வானாவின் கப்ரோன் நகரில் இம் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
இலங்கைத் தூதுக்குழுவில் சொலிஸிட்டர் ஜெனரல் யுவான் விஜேதிலக வெளிவிவகார அமைச்சின் சட்ட ஆலோசகர் துஷந்த விஜயமான நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் இடம்பெறுகின்றனர்.
 
பொதுநலவாய நாடுகள் எதிர்நோக்கும் நீதி மற்றும் சட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் பற்றி இந்த மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad