இணையத்தளங்கள் முடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, May 22, 2014

இணையத்தளங்கள் முடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் இணையத்தளங்கள் முடக்கப்பட்டமைக்கு எதிராக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் பேரவை மற்றும் சில அரசியல் கட்சிகள் இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.
சில இணையத்தளங்கள் சட்டவிரோதமான முறையில் முடக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்களை தடை செய்வதன் மூலம் அரசாங்கம் அரசியல் யாப்பை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சில இணைய செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சில இணைய தளங்கள் கூட உத்தியோகப் பற்றற்ற ரீதியில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் எட்டு இணையத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad