குருநாகலில் பொலிஸாரைக் கடத்திச் சென்று கொலை செய்த சந்தேக நபர் இவர்தான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 12, 2014

குருநாகலில் பொலிஸாரைக் கடத்திச் சென்று கொலை செய்த சந்தேக நபர் இவர்தான்

இரு பொலிஸாரை கடத்திச் சென்று அவர்களில் ஒருவரைக் கொலை செய்த சந்தேக நபரின் மாதிரிப்படத்தினை பொலிஸார் இன்று வெளியிட்டனர்.
 
குருநாகலில் இடம்பெற்ற இரண்டு பொலிஸார் கடத்தல், மற்றும் ஒருவரை கொலை செய்த சந்தேக நபரின் மாதிரி உருவப்படத்தினையே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 
மேலும் இச் சந்தேக நபர் ஏற்கனவே வெவல்தெனியவில் இடம்பெற்ற ஆயுதக்கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
 
மே மாதம் 5 ஆம் திகதியன்று வீதிப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டனர். அவர்களுள் சம்பத் என்பவர் படகமுவ காட்டிற்குள் வைத்து ஆயுததாரிகளினால் சுடப்பட்டார். மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் விஜேயசூரிய அவர்களிடமிருந்து தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.
 
இச் சந்தேக நபரை கைது செய்ய பொது மக்கள் உதவ வேண்டும் என்றும் இப்புகைப்படத்துடன் ஒத்தவர்களை இனம் காணும் பட்சத்தில் 077 2659336 இத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தருமான அஜித்ரோகன அறிவித்துள்ளார்.
 
மேலும் சந்தேக நபரை கைது செய்ய உதவும் மக்களுக்கு ரூபா 1 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad