காட்டு யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 26, 2014

காட்டு யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரிய மக்கள் பேரணியொன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு முன்னால் சென்றது.
வவுணதீவு பிரதேசத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணமும் இதில் பங்கேற்றார்.
இதையடுத்து பேரணியில் சென்ற பொதுமக்களினால் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை இரா.துரைரெட்ணம், மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள் சென்று பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கையளித்தார்.
வவுணதீவு பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்குள் 300 வீடுகள் யானைகளின் தாக்குதல்களினால் சேதமடைந்துள்ளன. 29பேர் யானை அடித்து உரிழந்துள்ளதாகவும் யானைகளின் கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் மற்றும் பயிர்ச் செய்கைகள் என்பவற்றை அழித்து சேதப்படுத்தி வருவதுடன் மிகவும் அச்சத்திற்கு மத்தியில் இப்பிரதேசத்தில் வாழவேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.







No comments:

Post Top Ad