ஹம்பாந்தோட்டையில் ஐ.தே.க பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

ஹம்பாந்தோட்டையில் ஐ.தே.க பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக  இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தல சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கியும் ஆயுதங்களை காட்டியும் அச்சுறுத்தியவர்கள் தொடர்பாக, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி. சில்வா, கபீர் ஹாசீம், பீ. ஹெரிசன், ருவான் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, அஜித் பீ. பெரேரா,  அஜித் மன்னப்பெரும,  எரான் விக்ரமரத்ன,  நலின் ஜயமக மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
எனினும், ஐ.தே.க வினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் மஹஜர் கையளிக்கப்பட்டதுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


No comments:

Post Top Ad