மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை கூட்டம் நாளை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 13, 2014

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை கூட்டம் நாளை(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை கூட்டம் இன்ஷா அல்லாஹ்  14.05.2014 நாளை  புதன் கிழமை அன்று ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனமானது காத்தான்குடிää ஏறாவூர்ääஓட்டமாவடி(கல்குடா) ஆகிய மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்ääபெண் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கி நிறுவப்பட்ட அமைப்பாகும்.

இதற்கமைவாகவே அமைப்பின் நிருவாக சபை கூட்டங்கள் மூன்று ஊரையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன செயலாளரின்  0778327822 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post Top Ad