உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை மாறி வருவதாக ஹெல உறுமய குற்றச்சாட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 05, 2014

உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை மாறி வருவதாக ஹெல உறுமய குற்றச்சாட்டு

உலக இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை மாறி வருவதாக குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக , தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக ரணவக மேலும் தெரிவிக்கையில்,
மலேஷியா இந்தோனேசியா பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களான அல்கொய்தா லக்சரி தொய்பா  தலிபான் காஷ்மீர் உட்பட இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையை மையமாக பயன்படுத்தி வருகின்றனர்.
 
அத்தோடு தமிழகத்தில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. 
 
இதன்வெளிப்பாடு தான் அண்மையில் சாஹீர் ஹுசைன் என்ற இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவமாகும். 
 
சென்னையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிற்கும் இத் தொடர்புகள் சாதகமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இன்று பாகிஸ்தானிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் அகதிகளென  தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர். அது மட்டுமல்லாது இன்று மாலைதீவு பிரஜைகளும் இங்கு வந்துள்ளனர். இதன் பின்னணி என்ன இவ்வாறு அகதிகளாகி வருபவர் யாரென்பது தொடர்பில் எமது நாட்டில் உளவுப் பிரிவினரால் தகவல்கள் சேகரிக்க வேண்டும்.

No comments:

Post Top Ad