வர்த்தக போட்டியை எதிர்கொள்ள முடியாதவர்களே வன்முறைகளை தூண்டுகின்றனர் ! அஸாத் சாலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

வர்த்தக போட்டியை எதிர்கொள்ள முடியாதவர்களே வன்முறைகளை தூண்டுகின்றனர் ! அஸாத் சாலி

(nf)
நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்குமாயின், நுகர்வோர் அந்த வர்த்தக நிலையங்களை நாடிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.

வர்த்தக போட்டியை நியாயமான முறையில் எதிர்கொள்ள முடியாதவர்களே வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்தமை மற்றும் மாவனல்லை ஆகிய பகுதிகளில் இந்தப் பாணியிலேயே கடை உடைப்பு மற்றும் கடைகள் எரியூட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளா​ர்.
இவ்வாறான தாக்குல்களின் பின்னணியில் செயற்படும் கும்பலை இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமைக்கான காரணம் குறித்தும், அஸாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் இடம்பெறும் பாரதூரமான குற்றங்களின் குற்றவாளிகளை ஒருசில நாட்களில் கைதுசெய்ய முடியுமானால், இவ்வாறான சம்பவங்களின் ஒரு சந்தேகநபரையாவது ஏன் இதுவரை கைது செய்யவில்லையென அவர் வினவியுள்ளார்.
இதன்மூலம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அஸாத் சாலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad