ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் மானுருவியில் காட்டு யானை அட்டகாசம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் மானுருவியில் காட்டு யானை அட்டகாசம் (படங்கள் இணைப்பு)

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக காட்டு யானைகள் மக்களின் குடியிருப்பு கிராம பகுதிகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது.ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் மானுருவிக் கிராமத்தில் இரவு வேளைகளில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் கிராமத்துக்குள் புகும் யானைகள் தென்னைஇ வாழைஇ பப்பாசி உள்ளிட்ட பயன்தரு மரங்களைத் தள்ளி வீழ்த்தி அவற்றை அழிப்பதுடன் வீடுகளுக்குள் இருக்கும் உணவுப் பொருள்களையும் இழுத்து எடுக்கின்றன.
அத்துடன் வீட்டுக்கூரைகளைப்பிடுங்கி எறிவதுடன் சுவர்களையும் தள்ளி வீழ்த்துகின்றன.

இதனால் இரவில் வீட்டில் நிம்மதியாகப் படுத்துறங்க முடியாதுள்ளதாகவும் அச்சத்துடன் விழித்திருந்து யானைகளை விரட்டவேண்டியுள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post Top Ad