அமைச்சு பதவிகளை துறக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

அமைச்சு பதவிகளை துறக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்

அரசாங்கத்தில் வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதி உயர் பீட உறுப்பினர் பசிர் சேகுதாவுத் ஆகியோருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் கிழக்கது; தலைவர்கள் இவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
அரசாங்கம் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து வருவதாகவும் அதனை எதிர்கும் முதல் கட்டமாக அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் போது கட்சி எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் அதி உயர் பீடம் தீர்மானிக்கும் என ஹக்கீம் குறி;ப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டால் கட்சி உறுப்பினர்கள் கட்சியை கைவிட்டு விடக் கூடுமென கிழக்கு மாகாண கட்சியின் சிரேஸ்ட அரசியில்வாதிகள்ää ஹக்கீடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருவதாகவும்ää கட்சியின் ஆதரவு இ;ல்லாவிட்டால் அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணசபையை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் பலத்தை நாட்டுக்கு காட்ட வேண்டுமென கட்சியின் கிழக்குத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post Top Ad