முஸ்லிம் மாணவியின் பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் கால அவகாசம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 14, 2014

முஸ்லிம் மாணவியின் பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் கால அவகாசம்

புதிய பாடசாலைக்கு தமது பிள்ளையை அனுப்புவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க, முஸ்லிம் மாணவி ஒருவரின் பெற்றோருக்கு, உயர்நீதிமன்றம்  கால அவகாசத்தை வழங்கியுள்ளது
எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாலிகா வித்தியாலத்துக்கு செல்லும் தமது மகளுக்கு இஸ்லாமிய முறைப்படி ஆடைகளை அணிய பாடசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. இது தமது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
எனவே ஜனாதிபதி பாலிகா வித்தியாலயத்துக்கு பதிலாக முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்களான பெற்றோர் கோரியுள்ளனர்.
இந்த மனுவின் விசாரணையின் போது நேற்று வாதம் புரிந்த அரச சட்டத்தரணி, குறித்த பெற்றோர், பாடசாலை நிர்வாகத்தின் ஒழுங்குகளை மதிக்க வேண்டு;ம் என்று கேட்டுக்கொண்டனர்

No comments:

Post Top Ad