இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர் ! பைசர் முஸ்தபா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர் ! பைசர் முஸ்தபா


இலங்கையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் அஞ்சுவதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹோட்டல் நிர்மாணம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆளும் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டுள்ளது.
முதலீடு செய்ததன் பின்னர் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுமோ என முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். வர்த்தமானி அறிவித்தலில் கசினோ பற்றி குறிப்பிடப்படவில்லை.
பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கள் அழைத்துவரப்படுகின்றனர். அவர்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கப்பட்டால் அது நாட்டை பாதிக்கும்.
வாழ்க்கையில் சந்தித்த மிக சவால் மிக்க ஊடகவியலாளர் சந்திப்பு இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad