புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து- - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 17, 2014

புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து-(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மோடி முன்கொண்டுசெல்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாத்தளை வாழ் மக்கள் சார்பில் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குஜ்ராத்தில் நடைபெற்ற மாநாட்டில் உங்களை நேரடியாகச் சந்தித்து இந்தியப் பிரதமராகுவதற்கு தெரிவித்த வாழ்த்து நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் ஹில்மி கரீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம்ää அரசியல் மற்றும் நிதிக் கொள்கை தொடர்பாக நீங்கள் காட்டும் அக்கறை குறித்து பெருமையடைவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும்ää இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என்று நம்புவதாகவும் மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம்ää நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad