பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­க­ளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்­புகள் தொடர்­பு ! பொதுபல சேனா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­க­ளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்­புகள் தொடர்­பு ! பொதுபல சேனா

(vi)

பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­க­ளுடன் இலங் கை முஸ்லிம் அமைப்­புகள் தொடர்­பு­களை வைத்­துள்­ளமை உறு­தி­யாகி விட்­டது என தெரி­வித்த பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு யுத்த கால கட்­டத்தை விடவும் தற்­போது வடக்கு கிழக்கில் பாது­காப்­பினை அதி­க­ரிக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்­டது. எம்மை பகைத்துக் கொள்­வது கண்­ணாடி வீட்டில் இருந்து கல் எறி­வதைப் போன்­றது. அதே போல் நாட்டில் மத­ர­சாக்­க­ளிலேயே முஸ்லிம் தீவி­ர­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.
 
பொது பல­சேனா பௌத்த அமைப்­பினால் கொழும்பில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே இக்­க­ருத்து முன்­வைக்­கப்­பட்­டது. இது தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,
இலங்­கையில் முஸ்லிம் தீவி­ர­வாதம் பர­வி­யுள்­ள­தாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நாம் குறிப்­பிட்டே வந்தோம். ஆனால் அர­சாங்கம் எமது கருத்­தினை கவ­னத்திற் கொள்­ள­வில்லை. ஆனால் நாம் சொன்ன காரணம் இன்று உண்­மை­யாகி விட்­டது. பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து இந்­தி­யாவை தாக்க இலங்கை முஸ்லிம் தீவி­ர­வா­திகள் செயற்­ப­டு­கின்­றனர் என சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு கண்டி நகரைச் சேர்ந்த சாகீர் {ஹசைன் என்­ப­வ­ரையும் கைது செய்­துள்­ளனர்.
 
இலங்­கை­யிலும் இந்­தி­யாவின் தமிழ் நாட்­டிலும் உள்ள தௌஹீத் ஜம்-ஆத் அமைப்­பு­களே இவ்­வா­றான குற்றச் செயல்­களை செய்­கின்­றன. ஆயுதக் கடத்தல் போதைப்­பொருள் விற்­ப­னைகள் என்ற சட்ட விரோத செயல்­களில் ஈடு­படும் இவ் அமைப்­புகள் தற்­போது இலங்­கைக்கு அவப் பெய­ரி­னையும் இலங்­கைக்குள் குழப்­பங்­க­ளையும் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். அது மாத்­தி­ர­மின்றி நீர்­கொ­ழும்பு பகு­தி­யிலும் ஆயி­ரத்து ஐந்­நூ­றுக்கும் மேற்­பட்ட பாகிஸ்­தா­னிய முஸ்லிம் இன மக்கள் வாழ்­கின்­றனர். இவர்கள் தொடர்பில் அர­சாங்கம் எவ்­வித கவனம் செலுத்­தாது உள்­ளது. நாங்கள் பேசினால் இன­வாதம் பரப்­பு­வ­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர்.
 
வடக்கு கிழக்கு கடற்­கரை பகு­தி­யினால் அத்­து­மீ­றிய வரு­கை­களும் தீவி­ர­வாதச் செயற்­பா­டு­களும் இடம் பெறு­கின்­றது. எனவே அர­சாங்கம் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்த காலத்தில் இருந்த இரா­ணு­வத்தை விடவும் தற்­போது அதி­க­ளவில் பலப்­ப­டுத்த வேண்டும். நாட்டின் பாது­காப்பு விட­யத்தில் அரசு மிகவும் கவ­ன­மாகக் செயற்­பட வேண்டும்.
 
மேலும் மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடு­களில் 90 சத­வீ­த­மான தீவி­ர­வாதக் கொள்­கைகள் மத­ர­சாக்­களில் தான் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச அறிக்­கைகள் மட்­டு­மன்றி சில முஸ்லிம் நாடு­களும் இவற்­றினை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இதே நிலைமை இன்று இலங்­கை­யிலும் உள்­ளது. கிழக்கில் முஸ்லிம் மத­வாதத் தீவி­ர­வாத அமைப்­புக்கள் முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரிடம் மத போத­னை­களைப் போல் தீவி­ர­வாத கொள்­கை­க­ளையும் பரப்­பு­கின்­றனர். அதன் விளைவே இன்று இந்­தி­யாவின் பல முக்­கிய நக­ரங்கள் மற்றும் அமெ­ரிக்­கா­விலும் தாக்­குதல் நடத்­து­ம­ள­விற்கு கொண்டு சென்­றுள்­ளது.
 
இதனை நாம் குறிப்­பிட்டால் தௌஹீத் ஜம்-ஆத் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகி­யவை எம்மை தடை செய்யக் கோரு­கின்­றனர். நாட்டை பாது­காக்கும் எம்மை தடை செய்தால் அவர்­களின் கொள்­கை­யினை இல­கு­வாக கொண்டு செல்ல முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.
 
எம்மை தடை செய்யக் கூறும் அதிகாரம் முஸ்லிம் அமைப்புகளுக்கோ தௌஹித் ஜம்-ஆத் அமைப்பிற்கோ இல்லை. எம்மை பகைத்துக் கொள்வது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவதனைப் போன்றது என்பதை அனைவருக்கும் எச்சரிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad