காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய செயலாளராக சபீல் நளீமி தெரிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, May 22, 2014

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய செயலாளராக சபீல் நளீமி தெரிவு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய செயலாளராக அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாக சபைக் கூட்டம் 21-05-2014 இன்று புதன்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை காரியாலயத்தில் அதன் தலைவர் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் சார்பாக அதன் செயலாளர் அல்லது பிரதிநிதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளராக இருக்க வேண்டுமென்ற விதந்துரைக்கமைய சம்மேளனத்தின் 2014-2015 ஆண்டுக்கான புதிய செயலாளராக ஜம்இய்யா உறுப்பினர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி கடந்த காலங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளராக சுமார் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சம்மேளனத்தின் நன்மதிப்பை பெற்று வருகின்ற இவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் 15 ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் சபை கூட்டத்திலிருந்து சம்மேளனத்தின் புதிய செயலாளராக அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி செயற்படுவார்.

No comments:

Post Top Ad