ஏறாவூரில் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை! (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 12, 2014

ஏறாவூரில் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை! (படங்கள் இணைப்பு)


“கிராமம் கிராமமாக வீடு வீடாக நிறைவான இல்லம் வளமான தாயகம்” என்ற தொனிப்பொருளில் மக்களின் காலடிக்குச் செல்லும் ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை  சனிக்கிழமை ஏறாவூரில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூதினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடம்பெயர் சேவையில் பிரதேச செயலக அலுவல்கள், பொலிஸ், அஞ்சல் அலுவலகம், சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம், காணி, விவசாயத் திணைக்கம், ஆயர்வேத வைத்தியத் தேவைகள், நகரசபை அலுவல்கள்,  விதாதா வளநிலையம், புகைப்பட பிடிப்பு, பொது வசதிகள், பிறப்பு இறப்புப் பதிவூ, சமூக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்த இடம்பெயர் சேவையில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர மேயர் அலிஸாஹிர் மௌலானா உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான எம்.ஐ. வாசித் அலிஇ அமீன் இஸ்ஸத் ஆஸாத் முஹம்மத் முஸ்தபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மக்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இந்த இடம்பெயர் சேவை நடத்தப்படுகின்றது.

No comments:

Post Top Ad