திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 26, 2014

திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)(முஹம்மட் முபாசிர்)

ஏத்தாளை, திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.


கல்லூரியின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.சி. சலாஹுத்தீன் தலைமையில் இடம்பெற இந்நிகழ்வில்இ தீரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி) பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு முதல் புனித அல்குர்ஆனை மனனம் செய்து வெளியேறிய 32 ஹாபிழ்கள் இவ்விழாவில் ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஹட்டன்இ தாருல் உலூம் உஸ்மானியா அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஐ.எம். முபாரக் (உஸ்மானி) சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ள இந்நிகழ்வில்இ புத்தளம் மற்றும் சூழவுள்ள பிரதான அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உற்பட பலரும் கலந்து கலந்து கொள்ளவுள்ளனர்.
திகழி மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழ் இயங்கும் அல் முஹம்மதியா அரபுக்கல்லூரி பிரதேசத்தில் குர்ஆன் மனன ஹிப்ழ் பிரிவில் பல பட்டதாரிகளை உருவாக்கி சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகம்.
தகவல்: கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் நதீர்


No comments:

Post Top Ad