மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வான் விபத்தில் அரச சேவைகள் தாதிமார் சங்கத்தின் கிழக்கு அமைப்பாளர் உட்பட நால்வர் படுகாயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வான் விபத்தில் அரச சேவைகள் தாதிமார் சங்கத்தின் கிழக்கு அமைப்பாளர் உட்பட நால்வர் படுகாயம் (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

திருகோணாமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில்  19-05-2014 நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வான் விபத்தில் அரச சேவைகள் தாதிமார் சங்கத்தின் கிழக்கு மாகாண  அமைப்பாளர் நாகலிங்கம் சதிதரன் உட்பட நால்வர் படுகாயமைடைந்துள்ளனர்.


திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்று மூதூர் பிரதேசத்திலுள்ள நீர் வாய்க்கால் ஒன்றில் குடைசாய்ந்ததில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயமடைந்த தாதியர் சங்க கிழக்கு மாகாண அமைப்பாளருக்கும்ää மற்றுமொரு தாதிய உத்தியோகத்தருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் அரச சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் நாகலிங்கம் சசிதரன்ää மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் இரா.ஹரிகரன் மற்றும் சட்டத்தரணி ஆரியசிவம்  உட்பட நால்வர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad