மூதூர் தளவைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய ஒன்று திரள்வோம். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 17, 2014

மூதூர் தளவைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய ஒன்று திரள்வோம்.(அபூ-அப்துல்லாஹ்)

திருமலை மாவட்டத்தில் மூதூர் தளவைத்தியசாலையானது நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் பல்வேறு இடர்பாடுகளுடன் இயங்கி வருகின்றது. 1974ம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 2006ம் ஆண்டு தளவைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்டு எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி இற்றை வரைக்கும் பல சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.


மூதூர்ää சேருவிலää ஈச்சலம்பற்று போன்ற பிரதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கிய 80000 மக்கள் தொகையைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு தாய் வைத்தியசாலையாக மூதூர் தளவைத்தியசாலை விளங்குகிறது.

மூதூர் வைத்தியசாலையின் நிலைகுறித்து கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின்
மாகாண பனிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தன்ää பிராந்திய சுகாதார பனிப்பாளர் டொக்டர் அனூசியாää திட்டமிடல் பணிமனை பிரவு திருமதி பி.கே.குணாலன் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் மூதூர் தளவைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் கே.எம்.இக்பால் (அதிபர் அல்-ஹிதாயா ம.வி) ஜே.ஜஸ்ரி மூதூர் பிரதேசசபை உறுப்பினர்ää என்.வள்ளிபுரம் அதிபர் இரால்குலி ம.விää அபிவிருத்திக் குழுத் செயலாளர் எம்.தஸ்லீம்  ஆகியேரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

எமது வைத்திய சாலையின் குறைபாடுகளை கேட்டறிந்த மாகாண பனிப்பாளர் சுகாதார அமைச்சர் மற்றும்ää செயலாளர் ஆகியோரிடம் கலந்துரையாடி மிக விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதிமொழி வழங்கினார்.No comments:

Post Top Ad