மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி -மட்டு- காத்தான்குடியில் -இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு). - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 14, 2014

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி -மட்டு- காத்தான்குடியில் -இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு).


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 25 பல்கலைக்கழக கல்லூரிகளில் அரச மற்றும் தனியார் துறையின் இணைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது பல்கலைக்கழக கல்லூரியான மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி 13-02-2014 நேற்று செவ்வாய்க்கிழமை இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும்ääஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளருமான டலஸ் அழகப்பெருமவினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


அத்தோடு மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு புதிதாக தமிழ்ääமுஸ்லிம் மாணவர்களும் உத்தியோகபூர்வமாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி திறப்பு விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் பணிப்பாளரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமää மாலைதீவு நாட்டு அமைச்சர்கள்ääசவூதி அரேபிய நாட்டினுடைய பேராசிரியர்கள் ääமுக்கியஸ்தர்கள்ää ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääகாத்தான்குடி நகர சபையின் தவிசாளர் அஸ்பர் உட்பட நகர சபை உறுப்பினர்களினால்  பொன்னாடை போர்த்தப்பட்டு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமää சிரேஷ்ட அமைச்சர் பௌசிääகிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்ääகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பைääமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ääமாலைதீவு நாட்டு அமைச்சர்கள்ääசவூதி அரேபிய நாட்டினுடைய பேராசிரியர்கள் முக்கியஸ்தர்கள்ää சவூதி அரேபிய  ராபிததுல் ஆலமுல் இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதிகள்ääஉள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள்ääஅரசியல் பிரமுகர்கள் ääகல்வியலாளர்கள்ää பல்கலைக்கழக உப வேந்தர்கள்ääஉலமாக்கள்ääஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப் பல்கலைக்கழ கல்லூரிக்கு மாணவர்களை  சேர்த்து கொள்ளும் போது தேசிய தொழிற்தகைமை 4ஆம் மட்டத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் மட்டுமன்றி க.பொத. உ.தரம் சித்தி பெற்ற மாணவர்களும் நுழைவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன் ஆரம்ப பாடநெறிகளாக தகவல் தொழிற்நுட்பம்ääநில அளவியல்ääபாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இப் பாடநெறிகள் 3 வருட காலத்தினை கொண்டுள்ளதோடு தற்போது முதல் கட்டமாக குறிப்பிட்ட பாடநெறிகளுக்காக சேர்த்து கொள்வதற்கு 74 மாணவர்களுக்கு நேர்முக பரீட்சையில் சேரத்துக்ககொள்ளப்படவுள்ளனர் இதில் 58 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில்  இவ் பல்கலைக்கழக கல்லூரிக்கான நிரந்தரக்கட்டிடம்  அமைக்கப்படவுள்ளதோடு அதுவரை காலமும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டிடத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad