அட்டாளைச்சேனையில் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைப்பு வருக! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 12, 2014

அட்டாளைச்சேனையில் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைப்பு வருக!(அ.றஹ்மான்)

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசம் இலங்கை முழுவதும் உள்ள மூவின மக்களுக்கும் சிறந்த கல்விகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட ஒரு வரலாற்று இடமாகும்.


இந்த வகையில் இது வரை காலமும் பெண்களுக்கான தனியான இஸ்லாமிய கல்லூரி இல்லாமல் இருந்து வந்த இந்த அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி வளாகம் எதிர்வரும் 2014.05.15 ஆம் திகதி(வியாழக்கிழமை) அஸர் தொழுகையைத் தொடர்ந்து பாவங்காய் வீதிஇ அட்டாளைச்சேனை 09யில் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்ற வருகைதரவுள்ளார் இந்தியாஇ காயல்பட்டனத்தைச் சேரந்த தெஹிவளைஇ இப்னு உமர் ஹதீஸ் உயர் கற்கை நெறியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அல் ஹாஜ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ(காஷிபிரூதேவ்பந்தி) அவர்கள்.

இவ்வரலாற்று நிகழ்ச்சி நேரடியாக  இஸ்லாமிய இணையதளமான www.acmyc.comயில்  ஒளிபரப்ப படும்.

வெளிநாட்டு மற்றும் வெளிப்பிரதேசங்களில் வாழும் எமது சகோதரர்கள் இந்நிகழ்ச்கியினை இன்ஷா அல்லாஹ் நேரடியாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு உள்ளது எமது நண்பர்கள் பார்வைய்டலாம்.


No comments:

Post Top Ad