மட்டு.கல்லடி பாலம் அருகில் விபத்து பாடசாலை மாணவி படுகாயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 17, 2014

மட்டு.கல்லடி பாலம் அருகில் விபத்து பாடசாலை மாணவி படுகாயம் (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்ப கல்லடிப் பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.45மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் பெரிய உப்போடையினை சேர்ந்தவரும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் உயர்தர மாணவியுமான இ.பிரியங்கா என்னும் மாணவியே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள சந்தியில் வீதியை கடக்கமுற்பட்டபோது வேகமாக பார ஊர் மோதியதன் காரணமாக படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காத்தான்குடியில் இருந்து பொலநறுவைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த பார ஊர்தியே மாணவி மீது மோதியுள்ளது.
இதேநேரம் விபத்து நடைபெற்று சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னரே குறித்த பகுதிக்கு பொலிஸார் வந்ததன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் சாரதியை தப்பிச்செல்லாதவாறு பிடித்து வைத்ததன் காரணமாக இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டது.
எனினும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகைதந்து நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், சாரதியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பார ஊர்தியும் இதன்போது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் எனினும் மாணவியின் நிலை தொடர்பில் தற்போதைய நிலையில் ஏதுவும் கூறமுடியாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments:

Post Top Ad