கிழக்கு மாகாண சபை குறித்து அமீர் அலியின் அச்சம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

கிழக்கு மாகாண சபை குறித்து அமீர் அலியின் அச்சம் (படங்கள் இணைப்பு)


இன்று கிழக்கு மாகாண சபையின் நிலமை அதிகாரிகளை பழிவாங்குகின்ற ஒரு சபையாக மாறிவிடுமோ என்ற அச்சம் தன்னிடம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் விஷேட தேவையுடையவர்களுக்கான வீடமைப்புக்கான காசோலை வழங்கும் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் எம்.சி.எம்.அன்சார் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
உயர் அதிகாரிகளை திட்டமிட்டு விஷேடமாக கல்வி அதிகாரிகளைத் திட்டமிட்டு அவர்கள் மீது பழி சுமத்தி அவர்களை கள்வர்களாக்கி அவர்கனை வேறு வேறு பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்கின்ற அல்லது அதே இடத்தில் இருந்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகின்ற ஒரு நிலவரம் தான் இப்பொழுது கிழக்கு மாகாண சபையினுடைய ஒட்டு மொத்த வேலைத்திட்டமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக என்னால் அறிய முடிகின்றது.
வேறு எந்தவொரு வேளையும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. பல கட்சிகள் கூட்டாக சேர்ந்து ஒரு மாகாண சபையை உருவாக்கி அமைச்சுக்களைப் பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக கல்வி அதிகாரிகளை இடமாற்றம் செய்கின்ற அல்லது அவர்களை மன உளைச்சலுக்கு உல்லாக்குகின்ற நிலவரத்திலயே அரசியல் தலைவர்களும் கிழக்கு மாகாண சபையும் செல்லுமாக இருந்தால் இதனை விட கேவலமான ஒரு நிகழ்வு வேறு ஒரு இடத்திலும் இருக்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை சிறப்பான ஒரு ஆட்சியைத் தரவேண்டும் என்பதற்காக கடந்த காலங்களிலே கனவு கண்டவர்கள் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் முன் நின்றவர்கள். சி.சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக வந்த பொழுது அதனை கௌரவமாக விட்டுக் கொடுத்து இந்தப் பிரதேசத்திலே ஒரு சிறந்த சேவையை எல்லா சமுகமும் பெற்றுக் கொள்வதற்கும் வழி வகுப்பதற்கும் நாங்கள் உறுதுனையாக இருந்தவர்கள் இன்று எல்லாம் நாசமாகிப் போய் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போய் இருக்கின்ற நிலவரத்திலேதான் கிழக்கு மாகாண சபை செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது.
கல்வியிலும் கூட அவ்வாறுதான் அருவறுப்புத் தக்க விடயங்களை அங்கு செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நான் மிகவும் மனவருத்தத்தோடு இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.
பழிவாங்குகின்ற மன நிலை அரசியல் தலைவர்களிடம் இருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஒரு அதிகாரியை திட்டமிட்டு பழிவாங்கி அவர்கள் மீது குற்றங்களைச் சுமத்தி குற்றவாழியாக சமுகத்திற்குக் காட்டி அந்த சமுகத்தில் இருந்து அவரை துறத்த முற்படுவது என்பது ஒரு சமுகத்திற்கு மாத்திரமல்ல அந்தப் பிராந்தியத்திற்கே ஆரோக்கியமான நிகழ்ச்சி நிரலாக அதை நான் பார்க்கவில்லை.
பிழைகள், பிரச்சினைகள் வருகின்ற பொழுது பேச்சுவார்த்தை மூலம் அதனைப் பேசி தீர்மானிக்கின்ற பக்குவம் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லாமல் போகின்ற பொழுது அங்கு இப் பிரச்சினை அதிகம் அதிகம் தோன்றும் வாய்ப்புக்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
கிழக்கு மாகாண சபையினுடைய எதிர்கால செயற்திட்டங்கள் பற்றி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். அங்கு அதிகாரிகள் தொடர்ச்சியாக பழிவாங்கப்படுவார்கள் என்று சொன்னால் கிழக்கு மாகாணத்தினுடைய ஆயுள் மிகவும் குறைவானது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏன் என்று சொன்னால் மக்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று வந்தவர்கள் நாங்கள் ஜனநாயக ரீதியில் வாக்குகளுக்கு பணம் கொடுக்காமல் அரசியலுக்கு வந்தவர்களுக்கு அதிக பாரமும் சுமையும் இருக்கின்றது

பணம் கொடுத்து அதிகாரத்திற்கு வந்தவர்களுக்கு அந்த சுமையைப் பற்றி வருத்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஏனென்றால் இன்னும் ஒரு தேர்தலை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். வாக்கிற்கு கூலி வாங்குபவர்களும் நம் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் நியாயப் பூர்வமாக மக்களுடைய வாக்குகளை வென்று வந்த நாங்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இந்த மக்களுக்கும், சமுகத்திற்கும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். இந்தப் பிராந்தியத்திலேயே கல்வி ரீதியாக மாற்றங்களை செய்து காட்டியவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் கல்வி மருமலர்ச்சிக்கும் ஒரு துரும்பளவு கூட பங்கு செய்யதா அரசியல் தலைவர்கள் இப்பொழுது கல்விக் காவலர்களாக அல்லது கல்வியாளர்களை பழிவாங்குபவர்களாக மாற முனைகின்றது. வேடிக்கையாகவும் கவலையாகவும் இருப்பதை இந்த சமூகம் இன்னும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்பதிலயே எனக்கு அதிகம் கவலையிருக்கின்றது.

இந்த நிகழ்வு மாற்றப்பட வேண்டும் எதிர் காலத்தில் கல்வி ரீதியான சிந்தனைகள் பழிவாங்கள்கள் அதிகாரிகளை நாங்கள் கள்வர்களாக பார்க்கின்ற அல்லது திட்டமிட்டு பழி வாங்குகின்ற நிகழ்ச்சி நிரலிலே இருந்து நாங்கள் மாற்றம் அடைகின்றவர்களாக மாறாத வரை சமூக ரீதியான முன்னேற்றத்தை யாராலும் முன்னெடுக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி ரீதியாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக கடந்த காலத்தில் மாத்திரம் அல்ல இப்பொழுதும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். விஷேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற எல்லா மக்களுக்கும் கல்வியின் பால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். அதன் அடிப்படையிலயேதான்; மூன்றாவது தடவையாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 92.28 வீதம் பெற்று இம் முறையும் முதலாவது கல்வி வலயமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு வேலை செய்கின்ற அதிகாரிகள் அவ் வலயத்திற்குற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் பங்களிப்பினைச் செய்து சிறந்த கல்வியாளர்களைத் தருகின்ற ஒரு வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அருக்கின்ற பொழுதிலும் கூட சில அரசியல்வாதிகள் அந்த அரசியல் வாதிகள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தை துவம்சம் செய்ய வேண்டும் என்று அல்லது கல்வி வலயத்தை சீறழிக்க வேண்டும் என்று அல்லது கிழக்கு மாகாணத்திலே கல்வியை சீறழிக்க வேண்டும்  என்று செயல்படுகின்ற ஒரு கவலையான நிலவரம் இன்று கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டு இருக்கின்றது என்றார்.No comments:

Post Top Ad