கோயிலுக்குள் புகுந்த இராணுவ ட்ரக் வண்டி 6 இராணுவத்தினர் படுகாயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 17, 2014

கோயிலுக்குள் புகுந்த இராணுவ ட்ரக் வண்டி 6 இராணுவத்தினர் படுகாயம் (படங்கள் இணைப்பு)


வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ ட்ரக் வண்டியொன்று யாழ். நாச்சிமார் கோயிலின் வாகனசாலைக் கட்டடத்தை உடைத்துக் கொண்டு உட்சென்ற சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கே.கே.எஸ் வீதியினூடாக காங்கேசன் துறைநோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து, நாச்சிமார் கோயிலில் அமைந்துள்ள அதன் சிற்ப வாகனசாலைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
கட்டடத்தை உடைத்துச் கொண்டு உள்ளே புகுந்த இராணுவ ட்ரக் வண்டி பலத்த சேதத்திற்குள்ளானதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோயிலின் சிற்ப வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் ட்ரக் வண்டியில் பயணித்த 4 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post Top Ad