மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை- அறுவடை தற்போது ஆரம்பம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை- அறுவடை தற்போது ஆரம்பம் (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.சசிகரன் தெரிவித்தார்.


கடந்த வருடம் செய்கை பண்ணப்பட்ட மரமுந்திரிகை செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதிääபுதுக்குடியிருப்புääகிராண்குளம்ää         களுவாஞ்சிக்குடி ääவாகரரை ääசெங்கலடி உட்பட      பல பிரதேச செயலகப்பிரிவுகளில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அறுவடையாகும் மரமுந்திரிகை பழங்கள் மற்றும் விதைகள் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

இதனை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இதனால் மரமுந்திரிகை செய்கையாளர்கள் பெரிதும் நன்மையடைகின்றனர்.

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad