வெசாக் உணவு 50 பேருக்கு விஷமாகியது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 14, 2014

வெசாக் உணவு 50 பேருக்கு விஷமாகியது

(tm)

மாத்தறை, தெனியாய, தியதாவ விகாரையில் காலை மற்றும் பகல் தானங்களை உட்கொண்ட 50பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெனியாய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. 


வெசாக் பௌர்ணமி தினமான இன்று, விகாரைகளில் சில் புண்ணிய நிகழ்வில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான உணவுகள் விகாரைகளிலேயே தானமாக வழங்கப்படுவது வழக்கம். 

இவ்வாறாக, தியதாவ விகாரையில் சில் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷமாகியதை அடுத்தே 50பேர் சுகவீனமுற்றுள்ளனர். 

இவர்களுக்கான காலை உணவாக நூடில்ஸ் வழங்கப்பட்டுள்ளதுடன் பகல் உணவாக சோறு, பருப்பு மற்றும் மாங்காய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post Top Ad