அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண் பலி-மட்டு- பழுகாமத்தில் சம்பவம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண் பலி-மட்டு- பழுகாமத்தில் சம்பவம் (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்த சம்பவம் (19) நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் 6 பிள்ளைகளின் தாயான (46வயது)  அரியமலர் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போது உயிரிழந்த 46 வயது அரியமலரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ääபிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும்.

குறித்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பிரிசோதகர் சி.ஐ.லொகுகேääபொலிஸ் பரிசோதகர் ஐ.பி.அபூபக்கர் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:

Post Top Ad