பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் 4வது நடமாடும் சேவை-காத்தான்குடியில்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, May 22, 2014

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் 4வது நடமாடும் சேவை-காத்தான்குடியில்-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள  பின்வரும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கான 4 வது நடமாடும் சேவை 22-05-2014 இன்று வியாழக்கிழமை காலை  காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்  தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் மேற்படி நடமாடும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு இடம்பெற்ற நடமாடும் சேவையில்   பிறப்பு இறப்புää திருமண பதிவுகள் வழங்குதல்ää தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்ää   முதியோர் அடையாள அட்டை வழங்குதல்ää  காணிப்பிரச்சினைக்கான தீர்வுகள்ää   சமூர்த்தி பிரிவின் சேவைகள்ää இலவச கண் பரிசோதனைääஆயுர்வேத வைத்திய சேவைகள்ää இலங்கை மின்சார சபையின் சேவைகள்ääதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சேவைகள்ää   வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் பணி புரிபவர்களை பதிவு செய்தல்ääபொலிஸ் சேவைகள் போன்ற பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் 164 கிராம சேவகர் பிரிவுää 164 ஏ கிராம சேவகர் பிரிவுää 164 பி  கிராம சேவகர் பிரிவுää164 சி கிராம சேவகர் பிரிவுää 165 பி கிராம சேவகர் பிரிவு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்காக பின்வரும் நடமாடும் சேவை நடைபெற்றது.

இந் நடமாடும் சேவை நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்ääகாத்தான்குடி மின்சார சபையின் பொறியியலாளர் நௌபல் ääகாத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷாரää காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பிரிவு பொறுப்பதிகாரி செல்வராஜா ääஉதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் ääஆயர்வேத வைத்தியர்கள்ääபிரதேச செயலக கணக்காளர் எஸ்.ரூபாகரன்ääநிருவாக உத்தியோகத்தர் எஸ்.சுந்தரராஜாääநிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.கோமளேஸ்வரன்ääபிரதேச செயலக சமுர்த்திப் பணிப்பாளர் ஈ.குணரத்தினம்ääமேலதிக மாவட்ட பதிவாளர் ஜெ.எம்.பைறூஸ் உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad