காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 805 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் முதலாம் இடம்பெற்று சாதனை-படங்கள் இணைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 14, 2014

காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 805 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் முதலாம் இடம்பெற்று சாதனை-படங்கள் இணைப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு -காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி  13-05-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.


இதன் போது பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் ஓட்டம் அணி நடைää தேகப் பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

அறபாääசபாääமர்வா ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீர ääவீராங்கனைகளுக்கு பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  மற்றும் கௌரவ அதிதிகளான மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்;ääமட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்;பை ääகாத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் ஆகியோரினால் கிண்ணங்களும் ääபரிசில்களும் ääசான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் 805 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் முதலாம் இடத்திலும் 659 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் இரண்டாம் இடத்திலும் ää646 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் மூன்றாம் இடத்திலும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ää மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்;பை ääகாத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர்ääமட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸ்மாலெவ்வைää காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர் ääமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான முபீன்ää பரீட் உட்பட மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ääஆசிரியர்கள் ääஉலமாக்கள் ääஊர் பிரமுகர்கள்  என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad