சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ! சுனாமி அலைகளும் தாக்கியது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 14, 2014

சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ! சுனாமி அலைகளும் தாக்கியதுசாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகள் உள்ளது, சில நாட்களுக்கு முன்பு இங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்போது வீடுகள் இடிந்து விழுந்ததுடன், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதை தொடர்ந்து சாலமன் தீவுகள், பப்புவா நியூசினியா, வனாதுபிஜி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது, கடலுக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து சிறிய அளவில் சுனாமி அலைகள் தாக்கின, தலைநகர் ஹோனியராவுக்கு தென்கிழக்கே சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post Top Ad