ஆட்கடத்தலை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா இலங்கைக்கு ரோந்துப் படகு கையளிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 01, 2014

ஆட்கடத்தலை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா இலங்கைக்கு ரோந்துப் படகு கையளிப்பு


ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த இரண்டு ரோந்துப் படகுகளில் ஒன்று உத்தியோக பூர்வமாக இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் க்யான்ஸ் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கை கடற்படைத் தளபதியிடம் இது ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அவுஸ்திரேலியப் பிரதமரால் சட்டவிரோத போக்குவரத்தினைத் தடுத்தல் மற்றும் கடல் சார்ந்த பாதுகாப்பினை வலுப்படுத்தல் போன்ற நோக்கங்களிற்காக இரண்டு ரோந்துப் படகுகளை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாகவே இந்த ரோந்துப் படகு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.

No comments:

Post Top Ad