மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை ! சரத் பொன்சேகா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை ! சரத் பொன்சேகா

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனியாக பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டியதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஏதேனும் அமைப்பு அல்லது இயக்கங்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டில் சட்டங்கள் காணப்படுகின்றன.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு.
ஏதேனும் ஓர் சம்பவம் இடம்பெறும்போது அதற்கு தீர்வு காண அரசியல் நோக்கத்துடன் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டால், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
ஒவ்வொரு சேனாக்களையும் பாதுகாப்பதற்காக பொலிஸ் பரிவுக் உருவாக்கப்பட்டால் அதில் பயனில்லை. அதன் மூலம் மத நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை.
நாட்டில் தற்போது உள்ள சட்டங்களை பொலிஸார் உரிய முறையில் அமுல்படுத்தினாலேயே பிரச்சினைகள் ஏற்படுவதனை தடுக்க முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad