வடக்கில் தமிழ் - முஸ்லிம் கூட்டமைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 27, 2014

வடக்கில் தமிழ் - முஸ்லிம் கூட்டமைப்பு


வடக்கில் தமிழ் - முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மதகுருமார்களும், வடக்கு ஜமயத்துல் உலமா சபை பிரதிநிதிகளும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் கடந்த 23ம் திகதி மன்னார் பேராயரின் இல்லத்தில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய எல்லா அபிவிருத்தித் திட்டங்களின் போதும் இரு இன சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad