ஹக்கீமை சந்தித்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்துமாறு பிக்குகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 21, 2014

ஹக்கீமை சந்தித்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்துமாறு பிக்குகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை


மலேசியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பௌத்த பிக்குமார் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நாயக்க தேரர் உட்பட சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரவுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் கடந்த காலங்களில் புனித பூமி பிரதேசங்களில் உள்ள காணிகளை அந்நிய மதத்தினர் பயன்படுத்துவதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.
அந்த அமைச்சர் அந்நிய மத அடிப்படைவாதிகளிடம் பணத்தை பெற்று வருகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி அனுப்பி வைக்கப்படும் கடிதம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிக்கு ஒருவர் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad