ஜாதிக பலசேனாவின் மத நல்லிணக்க ஊடக சந்திப்பை குழப்பிய பொதுபல சேனா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

ஜாதிக பலசேனாவின் மத நல்லிணக்க ஊடக சந்திப்பை குழப்பிய பொதுபல சேனா


மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால், அங்கு பெரும் அமளி ஏற்பட்டது.
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வட்டரெக்க விஜித தேரர் உட்பட ஏனைய மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தமக்கு ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினர்.
இந்த கோரிக்கையை ஜாதிக பலசேனா நிராகரித்ததை தொடர்ந்தும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இருத் தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
வட்டரெக்க தேரர், இப்படியான ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறினார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் மதப் பிரதிநிதிகளை பொதுபல சேனா அமைப்பினர் அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

No comments:

Post Top Ad