இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட தேரர் இறந்தார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 19, 2014

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட தேரர் இறந்தார்(ad)

படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் காலமாகியுள்ளார். 


இவர் கடந்த மாதம் 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகினார். 

இந்நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர் பின்னதாக கராப்பிட்டய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சிகிச்சை பெற்று வந்த தேரர் இன்று (19) அதிகாலை காலமானார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post Top Ad