மஹேல , சங்காவின் குற்றாச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

மஹேல , சங்காவின் குற்றாச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு(ad)

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஊடக அறிக்கை ஒன்றை இன்று (09) விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மஹேல ஜயவர்த்தனவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. 


இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகளின் பெயர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மஹேல வெளியிட்டுள்ள கருத்துக்கு அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக மஹேல நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

எனினும் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறுவது போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது முதலில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால் மஹேல ஜயவர்த்தனவும் குமார் சங்கக்காரவும் தங்களது ஓய்வு அறிவிப்பை முதலில் ஊடகங்களுக்கே விடுத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

No comments:

Post Top Ad