“பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

“பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சித்திரை புத்தாண்டு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனமும் சேவ்த சில்ரன் நிறுவனமும் இணைந்து “பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் “ எனும் தொனிப்பொருளில்  ஏற்பாடு செய்த மாபெரும் வியாபார மற்றும் தொழில் சந்தை 04-04-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் நாடாவை வெட்டி மேற்படி சந்தையை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் உப தலைவர் பயஸ் சசிதரன் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இத் தொழில் சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி.தங்கேஸ்வரி ääமட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பொது அமைப்புக்களின் தலைவர்கள்ää வை.எம்.சி.ஏ. நிறுவன பிரதிநிதிகள்ääமகளிர் அமைப்புக்கிள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு நிறுவப்பட்டுள்ள சந்தையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான ääதரமான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இத் தொழில் சந்தை நாளை 6 திங்கட்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் ஊடக அதிகாரி விமலாஹரன் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad